×

கோயில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டிய இடத்தில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு

கீழ்வேளூர்: நாகை அருகே தேவபுரீஸ்வரர் கோயிலில் திருப்பணிக்கு குழி தோண்டிய போது பல கோடி மதிப்புள்ள சாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த தேவூரில் தேன்மொழி உடனுறை தேவபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் 4ம் நூற்றாண்டில் கோட்செங்க சோழனால் கட்டப்பட்டதாகும். வரலாற்று சிறப்பு மிக்க இக்கோயிலை புதுப்பித்து மகாகும்பாபிஷேகம் நடத்த திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் கோயிலில் ஒரு பகுதியில் நவக்கிரக சாமிகள் வைக்க மண்டபம் கட்ட பில்லர் அமைப்பதற்கு குழி தோண்டப்பட்டது. அப்போது 4 அடி ஆழத்தில் அம்மன் சிலை இருந்ததை தொழிலாளர்கள் பார்த்தனர். இதில் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள், சிலை இருந்த இடத்தை உடனடியாக மூடி வைத்து விட்டனர். இந்த தகவல் தேவூர் பகுதியில் கசிய தொடங்கியது. தகவல் அறிந்த கீழ்வேளூர் தாசில்தார் மாரிமுத்து நேற்று அங்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் அந்த இடத்தை தொழிலாளர்கள் மீண்டும் தோண்டினர். அப்போது தோண்டத் ேதாண்ட அரை அடி முதல்  4 அடி வரையிலான 17 ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. இதில் பெரும்பாலானவை அம்மன் சிலைகளாக இருந்தன. மேலும் தோண்டியபோது திருவாச்சி, சூலம், அடிபீடம், பத்திமடம், தண்ணீர் கடம் (சங்குவடிவில்) தூபம், தூபக்கால் என 30 பூஜை பொருட்களும் கிடைத்தது. பின்னர் அந்த சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தும் அறநிலையத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவை கோயிலில் உள்ள அறையில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த சிலைகள் அனைத்தும் பல கோடி ரூபாய் மதிப்புள்ளவை என அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். …

The post கோயில் திருப்பணிக்காக பள்ளம் தோண்டிய இடத்தில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Devapureeswarar ,Nagai.… ,
× RELATED துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி...