அலங்காநல்லூர் அருகே ஆதிசிவன் கோவில் கும்பாபிஷேகம்

அலங்காநல்லூர், பிப்.17:  அலங்காநல்லூர் அருகே சின்னஇலந்தைகுளம் கிராமத்தில் ஆதிசிவன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடந்த இந்த யாக சாலை பூஜையில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால யாக பூஜையுடன் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க மேளதாளங்களுடன் சிவலிங்கத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அங்குள்ள ஸ்ரீ விநாயகர், முருகன் சிலைகளுக்கும்  புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அங்கு வருகை தந்த பக்தர்களுக்கு அறுசுவை உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை சின்னஇலந்தைகுளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: