×

ஒட்டன்சத்திரத்தில் தேங்காய் ஏலம்

ஒட்டன்சத்திரம், பிப். 17: ஒட்டன்சத்திரம்  ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது.  விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜோசப் அருளானந்தம் தலைமை வகித்தார். ஏலத்தில்  மட்டை தேங்காய் 9.60 குவிண்டாால் வரத்து வந்தது. இதில் அதிகபட்சமாக ஒரு  கிலோ ரூ.9.60க்கும், குறைந்தபட்சமாக ஒரு கிலோ ரூ.8.20க்கும் ஏலம் போனது.  கொப்பரை தேங்காய் 10 குவிண்டால் வரத்து வந்தது. இதன் விலை அதிகபட்சமாக ஒரு  கிலோ ரூ.94க்கும், குறைந்தபட்சமாக ஒரு கிலோ ரூ.82க்கும் போனது. ஏலத்தின்  போது இளநிலை உதவியாளர் இந்துமதி, மண்டி ஆய்வாளர் அசோக்குமார், பணியாளர்கள்  நாட்ராயன், நந்தினி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Ottanchattaram ,
× RELATED சுற்றுலாத்துறை சார்பில் மலையாளப்பட்டியில் கிராமிய பொங்கல் விழா