×

மன்னார்குடி நகராட்சி 31வது வார்டில் தனி ரேஷன் கடை அமைத்து தரப்படும்

மன்னார்குடி, பிப்.17:மன்னார்குடி நகராட்சி 31வது வார்டில் திமுக சார்பில் வேட்பாளராக ஆசியா பேகம் ஹாஜாமொய்தீன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.இவருக்கு வாக்குகள் கேட்டு வஉசி சாலை கலைஞர் திடலில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் டிஆர்பி.ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில், மன்னார்குடியில் பாதாள சாக்கடை திட்டம், ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலைய திட்டம், டிஜிட்டல் நூலகம் என பல்வேறு திட்டங்களுக்கான பூர்வாங்க பணிகள் தொடங்கிவிட்டன. இந்த 31வது வார்டு எனது சொந்த வார்டு போன்றதாகும்.  அருணாநகர், மீனாட்சிநகர், ராஜீவ்காந்தி தெரு, திருமால் நகர், மூவேந்தர் நகர் ஆகிய பகுதிகளிலுள்ள பூங்காக்கள் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள நடைபாதை அமைக்கப்படும். வார்டில் உள்ள அனைத்து குறுக்கு தெருக்களிலும் புதிய சாலைகள் அமைக்கப்படும்.31வது வார்டு பகுதிக்கென்று தனி ரேஷன் கடை அமைத்து தரப்படும். மடத்து தெரு, மூவேந்தர் நகர், 6ம் நகர் பகுதிகளில் உரிய அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எம்எல்ஏ., டிஆர்பி.ராஜா பேசினார்.


Tags : Mannargudi ,
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...