மன்னார்குடி நகராட்சி 25வது வார்டில் இளைஞர்கள் உடல் வலிமை பெற அம்மா உடற்பயிற்சி மையம்

மன்னார்குடி, பிப்.17: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் காமராஜ் எம்எல்ஏ ஆகியோரின் ஆசியோடு மன்னார்குடி நகராட்சி 25வது வார்டில் வேட்பாளராக நகர செயலாளர் ஆர்ஜி குமார் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், அதிமுக வேட்பாளர் ஆர்ஜி குமார் தனக்கு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு 25வது வார்டுக்குட்பட்ட ஒத்தை தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று வீடு வீடாக சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, வார்டில் உள்ள இளைஞர்கள் உடல் வலிமை பெற அம்மா உடற்பயிற்சி மையம் அமைக்கப்படும். 10 வீடுகளுக்கு ஒரு குப்பை தொட்டி வைத்து பொது சுகாதாரத்தை பேணி காப்பேன். பழுதடைந்த சாலைகள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்படும். வார்டு குறைகள், பணிகள் குறித்து பொதுமக்கள் மனுக்கள் அளிக்க ஒவ்வொரு தெருக்களிலும் புகார் பெட்டிகள் அமைக்கப்படும். அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

எனவே, 25வது வார்டில் போட்டியிடும் எனக்கு ஆதரவளித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.வேட்பாளருடன், கோட்டூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், ஹேமலதா குமார், வார்டு நிர்வாகி குலோத்துங்கன், வட்ட செயலாளர் ஜான் ராஜா, தகவல் தொழில் நுட்ப பிரிவு நகர செயலாளர் குட்டிமணி மற்றும் அதிமுக நிர் வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories: