×

திருவையாறு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருவையாறு, பிப்.17: திருவையாறு அடுத்த திருவேதிகுடியை சேர்ந்த மாரிமுத்து மகன் திரிசங்கு(29), கண்டியூரை சேர்ந்த மதியழகன் மகன் மகாதேவன்(20) ஆகிய இருவரும் 2 மாட்டு வண்டியில் கண்டியூர் குடமுருட்டி ஆற்றிலிருந்து அரசு அனுமதியில்லாமல் மணலை ஏற்றிக்கொண்டு அய்யம்பேட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்தது.அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் ரேணுகா மற்றும் போலீசார் 2 மாட்டு வண்டிகளையும் மறித்து சோதனை செய்தபோது அரசு அனுமதியில்லாமல் மணல் அள்ளியது தெரியவந்தது.உடனே 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து திருவையாறு காவல் நிலையத்திற்கு கொண்டுவந்து வழக்கு பதிவு செய்து திரிசங்கு, மகாதேவன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கும்பகோணம், பிப்.17: கும்பகோணம் அருகே பாபநாசம் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளது. அஞ்சல் வாக்கு பெட்டிக்கு சீல் வைத்தனர்.

கும்பகோணம் அருகே பாபநாசம் பேரூராட்சியில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மும்முரம் அடைந்துள்ளன. பாபநாசம் பேரூராட்சியில் தபால் வாக்குகள் செலுத்துவதற்குரிய விண்ணப்பங்கள் தனித்தனியே அரசு ஊழியர்களுக்கு விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அஞ்சல் வாக்குச்சீட்டினை அரசு ஊழியர்கள் ஓட்டுப்போடும் அஞ்சல்வாக்கு பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.பாபநாசம் பேரூராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளில் வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் பிரிக்கப்பட்டு வாக்குச்சாவடி வாரியாக எண்கள் எழுதப்பட்ட பைகளில் தனித்தனியாக எடுத்து வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இப்பணியினை பாபநாசம் தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயன், மண்டல அலுவலர் பூங்குழலி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ரவிச்சந்திரன், சுந்தரேசன் ஆகியோர் மேற்கொண்டனர்.

Tags : Thiruvaiyaru ,
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியில் 4,021...