×

மாசி மகத்தை முன்னிட்டு சதுராங்கப்பட்டினம் கடற்கரையில் தீர்த்தவாரி

திருக்கழுக்குன்றம்: மாசிமக பௌர்ணமியை முன்னிட்டு கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினம் கடற்கரையில், கல்பாக்கம் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த கோயில்களில் உள்ள சுவாமிகள் மாசி மாத பௌர்ணமி நாளில் ஆண்டுதோறும் கடலில் தீர்த்தவாரியில் ஈடுபடுவது வழக்கம்.

இதைதொடர்ந்து, இந்தாண்டு மாசி பௌர்ணமியையொட்டி நேற்று, சதுரங்கப்பட்டினம் கடற்கரையில் இருந்து சிறப்பு பூஜைகள், மங்கள வாத்தியம் முழங்க வாண வேடிக்கையுடன் சதுரங்கப்பட்டினம் ஸ்ரீவரதராஜ பெருமாள் முன் செல்ல வரதராஜ பெருமாள், காமாட்சி அம்பிகை சமேத ஏகாம்பரநாதர், ஸ்ரீஐயப்பன், மெய்யூர்  ஆதிகேசவ பெருமாள்,  ஸ்ரீபத்மாவதி சமேத ஸ்ரீவெங்கடேச பெருமாள், முள்ளி கொளத்தூர் முருகன், மேல் பெருமாள்சேரி ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் என 18க்கும் மேற்பட்ட சுவாமிகள் பின் தொடர்ந்து சென்று கடற்கரையில் எழுந்தருளினர். முதலில் சக்கரத்தாழ்வார் கடலில் நீராட அதனை தொடர்ந்து, அனைத்து உற்சவ மூர்த்திகளும் தீர்த்தவாரியில் ஈடுப்பட்டனர். இதனை காண கல்பாக்கம் சுற்றுப் வட்டார கிராமங்களில் இருந்து 3000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Tags : Tirthwari ,Chaturangapattinam ,Masi Magam ,
× RELATED தீர்த்தவாரி உற்சவ நிகழ்ச்சிக்காக...