×

புழுதிவாக்கத்தில் மகப்பேறு மருத்துவமனை அமைத்து தருவேன்: திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் வாக்குறுதி

ஆலந்தூர்: பெருங்குடி மண்டலம் 186வது வார்டு திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் புழுதிவாக்கம் சித்தேரி, ஏரிக்கரை, ஷீலா நகர், சீனிவாசன் நகர், அகத்தியர் தெரு, ராமலிங்கம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் `தமிழக முதல்வரின் அனைத்து திட்டங்களையும் கொண்டு வருவேன். பேருந்து வசதி இல்லாத பகுதிகளுக்கு மினி பேருந்து இயக்கமுயற்சி மேற்கொள்வேன்.  புழுதிவாக்கத்தில் மகப்பேறு மருத்துவமனை அமைத்து தருவேன். தரமான சாலை வசதி, குடிநீர் வசதி நிறைவேற்றி தருவேன்’ என வாக்குறுதி அளித்தார்.

இந்த வாக்குசேகரிப்பின்போது, 186வது வட்ட திமுக பொறுப்பாளர் குமாரசாமி, வழக்கறிஞர் கமலநாதன், முன்னாள் கவுன்சிலர் புனிதன், ஜனார்த்தனன், ராமமூர்த்தி, லட்சுமணன், சுப.சரவணன் கோட்டீஸ்வரன், மகேஸ்வரன், குபேரா, யோகராஜன், ஆர்.மணிகண்டன், ரகுபதி, பி.எம்.தினேஷ், மதுசூதனன், ரமேஷ், முரளி, பாண்டு, ஜி.பி.சரவணன், எம்.சம்பத்குமார், பி.விஜயகுமார், மகளிரணி சங்கீதா, வசுமதி, சுபஸ்ரீ, கலா, வனிதா, காங்கிரஸ் சார்பாக வட்டார தலைவர் லோகநாதன், வட்ட தலைவர் பி.குமார், மாவட்ட பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  

Tags : Puduvakkam ,DMK ,JK Manikandan ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...