×

தூத்துக்குடி 20வது வார்டில் ஜெகன்பெரியசாமியை ஆதரித்து அமைச்சர் கீதாஜீவன் தீவிர பிரசாரம்

தூத்துக்குடி,பிப்.17: தூத்துக்குடி மாநகராட்சி 20வது வார்டு திமுக வேட்பாளர் ஜெகன் பெரியசாமியை ஆதரித்து அமைச்சர் கீதாஜீவன் வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலில் 20வது வார்டு உறுப்பினர் பதவிக்கு திமுக வேட்பாளராக ஜெகன்பெரியசாமி போட்டியிடுகிறார். வேட்பாளர் ஜெகன்பெரியசாமிக்கு ஆதரவு கேட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், அமைச்சருமான கீதாஜீவன் 20வது வார்டிற்குட்பட்ட போல்பேட்டை, டி.எம்.சி காலனி, சுந்தரராமபுரம், செல்வநாயகபுரம், எட்டயபுரம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது, ‘கடந்த 10ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி வார்டுகளில் சாலைகளே அமைக்கப்படவில்லை. குப்பைகளை அகற்றும் பணிகள் கூட சரிவர நடைபெறவில்லை. மாநகராட்சியின் 20வது வார்டுக்குரிய அனைத்து பகுதிகளிலும் புதியதாக சாலைகள் அமைத்திடவும், குப்பைகள் சேராமல் தடுத்து தூய்மை பணிகளை சரியாக மேற்கொள்ளவும், வார்டில் மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முழுமையாக நிறைவேறிடவும் பொதுமக்களான நீங்கள் அனைவரும் தமிழக முதல்வர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆதரவுபெற்ற ஜெகன்பெரியசாமியை வெற்றி பெற செய்திடவேண்டும்.

கடந்த மழையின் போது குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக சூழ்ந்து பாதிக்கப்பட்ட உங்களை தேடி வந்து உதவி செய்யாத அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் தற்போது உங்களை தேடி வந்து ஓட்டு கேட்கின்றனர். அவர்களுக்கு நீங்கள் தகுந்த பாடம் புகட்டிட உதயசூரியனுக்கு வாக்குகளை தந்திடவேண்டும். வரும் காலங்களில் மாநகர பகுதிகளில் எங்கும் மழைநீர் தேங்காத வகையில் வடிகால்கள் அமைக்கப்படும்’ என்றார். இதில், 20வது வார்டு திமுக வேட்பாளரும், பொதுக்குழு உறுப்பின ருமான ஜெகன் பெரிய சாமி, மாநில காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் ஏபிசிவி.சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், வட்ட செயலாளர்கள் ரவீந்திரன், நாராயணன், சமூக ஆர்வலர் ஐசக், முன்னாள் கவுன்சிலர்கள் முத்துசெல்வம், கிங்ஸ்டன், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், திமுக நிர்வாகிகள் அற்புதராஜ், அருணகிரி, பாலமுருகன், பிரபாகரன், மாயா, லாரன்ஸ், முத்துகுமார், ஜேஸ்பர் ஞானமார்ட்டின், பேச்சிமுத்து, சேகர், மந்திரம், சுடலைமணி, பெரியசாமிராஜா, லிங்கராஜ், தங்கம்மாள், ஜெய்லாணி, சக்திவேல், பாலசுப்பிரமணி, விநாயகமூர்த்தி, சரவணன், பிரதீப் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.

Tags : Minister ,Geethajeevan ,Jaganperiyasamy ,20th Ward ,Thoothukudi ,
× RELATED தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்