×

நீலகிரி எம்பி ஆ. ராசா பிரசாரம் சின்கோனா செல்லும் சாலையில் சாய்ந்த மரக்கிளைகளால் வாகன ஓட்டிகள் பாதிப்பு

ஊட்டி,பிப்.15: ஊட்டியில் இருந்து சின்கோனா செல்லும் சாலைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் சீகை மரங்களை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலையோரங்களில் கற்பூர மரங்கள் மற்றும் சீகை மரங்கள் வளர்ந்துள்ளன. இவற்றின் கிளைகள் சாலைகளின் நடுவே தொங்கிக் கொண்டிருப்பதாலும், மிக தாழ்வாக சாய்ந்து கொண்டிருப்பதாலும், வாகன போக்குவரத்திற்கு பெரும் இடையூறாக உள்ளது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் இது போன்ற மரங்கள் மற்றும் மரக்கிளைகள் தொங்கிக் கொண்டிருப்பதால், வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி, கனரக வானங்கள் இந்த மரங்களில் ேமாதி விபத்து ஏற்படுகிறது. குறிப்பாக, ஊட்டியில் இருந்து தொட்டபெட்டா வழியாக சின்ேகானா மற்றும் அகலார் போன்ற கிராமங்களுக்கு செல்லும் சாலையில் தொட்டபெட்டா முதல் சின்கோனா வரையில் உள்ள சாலையில் தொங்கிக் கொண்டிருக்கும் சீகை மரங்களால் நாள் தோறும் வாகனங்கள் மோதி பழுதடைகின்றன. மேலும், எந்நேரமும் நிழல் விழுவதால், சாலையும் விரைந்து பழுதடைகின்றன. எனவே, இச்சாலைகளில் தொங்கிக் கொண்டிருக்கும் சீகை மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Nilgiris ,MP b. ,Raza ,Cincona ,
× RELATED நீலகிரியில் பருவ மழை துவக்கம்...