திருச்சுழி அருகே ரூ.1.18 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர்

திருச்சுழி, பிப். 15:  தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலின் போது திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி கடந்த மாதம்  கூட்டுறவு வங்கியில் 5 சவரன் குறைவாக  வைக்கப்பட்ட நகைகளை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து முதல்வர் ஆணைக்கிங்க விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே முத்துராமலிங்கபுரம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கான விழா நடைபெற்றது.  இவ்விழாவை  தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். ஒன்றிய பெருந்தலைவர் பொன்னுத்தம்பி, வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தனபாண்டி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செந்தில்குமார், துணை பதிவாளர் ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  மேலும் இந்த விழாவில் சுமார் 1 கோடியே 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான சுமார் 420 பயனாளிகளுக்கு கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர்.

Related Stories: