வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு சின்னமனூரில் டி.ஆர்.ஓ ஆய்வு

சின்னமனூர், பிப். 15: சின்னமனூர் நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இதில், 25வது வார்டு திமுக வேட்பாளர் அய்யம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். பாக்கியுள்ள 26 வார்டுகளுக்கு வருகிற 19ம் தேதி உள்ளாட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் என 157 பேர் களத்தில் உள்ளனர். வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபடு வருகின்றனர்.

26 வார்டுகளில் பதிவாகும் வாக்குகளை எண்ணுவதற்கு, சின்னமனூர்-சீப்பாலக்கோட்டை சாலையில் மின்நகர் அருகில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், மாவட்ட டி.ஆர்.ஓ சுப்பிரமணி வாக்கு எண்ணும் மையத்தை நேற்று ஆய்வு செய்தார். அப்போது, வாக்கு எண்ணும் இடத்திற்கு தேவையான பாதுகாப்பு, தேவயான அலுவலர்கள், பணியாளர்கள், வேட்பாளர்கள், அவருடன் உடனிருப்பவர்கள் ஆகியவற்றை, தேர்தல் அலுவலர் ஜெயகாந்தனிடம் ஆலோசனை நடத்தினார்.

Related Stories: