×

பெரும்பாறை அருகே தோதகத்தி மரம் வெட்டி கடத்தல் வனத்துறையினர் விசாரணை

பட்டிவீரன்பட்டி, பிப். 15 பெரும்பாறை அருகே கொட்டங்காடு மலைகிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஜெயலட்சுமி (64). இவருக்கு சொந்தமான மலைத்தோட்டம் கொட்டலாங்காட்டில் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய கஜா புயலில் தோதகத்தி மரம் ஒன்று சாய்ந்து கிடந்துள்ளது. கணவர் ராஜேந்திரன் இறந்துவிட்ட காரணத்தினால், ஜெயலட்சுமி தோட்டத்திற்கு சரிவர செல்லவில்லை. இதனை பயன்படுத்தி மர்மநபர்கள் தோதகத்தி மரத்தை வெட்டி கடத்தி சென்று விட்டனர். இதுகுறித்து ஜெயலட்சுமி புகாரில் வனச்சரகர் ஆறுமுகம், வனவர் அய்யனார்செல்வம், வனகாப்பாளர் பீட்டர்ராஜா ஆகியோர் நேற்று கொட்டலாங்காட்டில் விசாரணை நடத்தினார். இதில் மரங்களை வெட்டி கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மரத்தை வெட்டி கடத்தியவர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது, ‘மலைப்பகுதிகளில் உயிருள்ள மரங்களை வெட்ட அனுமதி கிடையாது. தானாக சாய்ந்த மரங்களை மட்டும் உரிய அனுமதி பெற்று வெட்டி எடுத்து செல்லலாம். அனுமதியின்றி மரங்களை வெட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : Perumparai ,
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில்...