திமுக வேட்பாளர் சர்மிளாதேவி திவாகரை ஆதரித்து ஜெ.கே.மணிகண்டன் வாக்கு சேகரிப்பு

ஆலந்தூர்: சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் 185வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சர்மிளாதேவி திவாகரை ஆதரித்து, 186வது வார்டு திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் நேற்று உள்ளகரம் ஏரிக்கரை தெரு, மதியழகன் தெரு, ஆபிரகாம் தெரு, எம்.ஜி.ஆர்.தெரு, ஆழ்வார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசுகையில், ‘‘தமிழக முதல்வர் பதவி ஏற்றது முதல் பல்வேறு மக்கள் நல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். முதல்வர் அளிவித்த குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாயை பெற்றுத்தர சர்மிளா தேவிக்கு வாக்களியுங்கள். முதல்வரின் அனைத்து திட்டங்களும் உங்கள் பகுதிக்கு வந்துசேரும், குறைந்த மின் அழுத்த பிரச்னையை போக்க புதிய டிரான்ஸ்பார்மர், தரமான சாலை, குடிநீர், தெரு விளக்கு வசதி போன்றவற்றை சர்மிளா தேவி நிறைவேற்றி தருவார்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின்போது, வட்ட செயலாளர் திவாகர், ரவீந்திரகுமார், நிர்வாகிகள் வினாயகம், ஜெயக்குமார், சுப்பிரமணி, கராத்தே வெங்கட், கே.ராஜேந்திரன், எம்.இ.ஜோதி, டி.ரவி, மொசைக் சேகர், வெங்கடேசன், மதிமுக சார்பில் பி.கஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: