×

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் வழக்கு அரசு, காவல் துறை பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலை கண்காணிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் அரசும், காவல்துறையும் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவிவர்மா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜனவரி 9ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திடீரென ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்ததால் ஜனவரி 20ம் தேதி தேர்தலை நடத்த முடிவு செய்ததாக அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தேர்தலை நடத்த உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி அளிக்கப்பட்ட மனுவை சென்னை மாநகர காவல்துறை  நிராகரித்துள்ளது.

எனவே தேர்தலை நடத்த உரிய பாதுகாப்பு வழங்கும்படி காவல்துறைக்கும், தேர்தலை நடத்த அனுமதி வழங்குமாறு சுகாதார துறைக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட வேண்டும். தேர்தல் நடவடிக்கைகளை பார்வையிடுவதற்கு பார்வையாளரை நியமிக்க தொழிலாளர் நலத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, மனுதாரர் தரப்பில் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாகவும், அனுமதி வழங்கினால் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, காவல்துறை, சுகாதாரத்துறை, சென்னை மாநகராட்சி மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியவை இந்த மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைத்தார்.

Tags : Sinnathirai ,Actors' ,Union Election Case Government ,Police Department ,iCourt ,
× RELATED தென்னிந்திய நடிகர் சங்க கட்டத்திற்கு...