திமுக வேட்பாளர் காமராஜை ஆதரித்து டி.ஆர்.பாலு எம்பி பிரசாரம்

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி 49வது வார்டு திமுக வேட்பாளரான தாம்பரம் நகர முன்னாள் துணை தலைவர் காமராஜை ஆதரித்து, திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், திமுக பொருளாளருமான டி.ஆர்.பாலு எம்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘திமுக ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது, அனைவரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இதன்காரணமாக, கடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு பெரும்பாலான இடங்களில் மக்கள் வாய்ப்பு அளித்தனர்.

அதேபோல் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவின் நல்லாட்சி அமைந்திட மக்கள் ஆர்வமாக உள்ளனர். எனவே, காமராஜ் வெற்றிக்கு நிர்வாகிகள் களப்பணியாற்ற வேண்டும். அவர் வெற்றி பெற்றதும் மக்களுக்கு தேவையான அனைத்து பணிகளையும் செய்து கொடுப்பார். மக்கள் கோரிக்கைகளை நிச்சயமாக நிறைவேற்றுவார்,’’ என்றார். வாக்கு சேகரிப்பின் போது தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பீமாராவ், திமுகவினர் பா.பாரதி, கோ.ராஜேந்திரன், பட்டுராஜா, கந்தசாமி, சீனா, ரமேஷ், பாஸ்கர், விக்கி (எ) யுவராஜ், பன்னீர்செல்வம், ஏழுமலை, சதீஷ், தனஞ்செயன், பாலா, கோபி, குருமணி, கணபதி, சுரேஷ், மைக்கேல், நியூட்டன், ஹரிகிருஷ்ணன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Related Stories: