×

மன்னார்குடி நகராட்சி 21வது வார்டில் அரசின் திட்டங்கள் அனைவருக்கும் சென்றடைய அயராது உழைப்பேன்

மன்னார்குடி, பிப்.15: அரசின் அனைத்து திட்டங்களும் வார்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய அயராது உழைப்பேன் என மன்னார்குடி நகராட்சி 21வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மீனாட்சி சூர்யபிரகாஷ் வாக்காளர்களிடம் உறுதியளித்தார்.மன்னார்குடி நகராட்சி 21வது வார்டில் வானக்கார தெரு, கீழ, மேல, குறுக்கு பத்ம சாலவர் தெரு, அனுமார் கோயில் தெரு, சியாமளா கோயில் தெரு, கீழ ராஜ வீதி, சிங்காரவேலு தெரு உள்ளன. இந்த வார்டில் 1715 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வார்டில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக தலைவர் முக ஸ்டாலின், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ, டிஆர்பி ராஜா எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மாநில சுற்றுச்சுழல் அணியில் செயலாளர் கார்த்திகேயன் சிவசேனாதிபதி, நகர செயலாளர் வீராகணேசன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் ஆதரவு பெற்ற திமுக வேட்பாளராக மீனாட்சி சூர்யபிரகாஷ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

முன்னாள் அமைச்சர் மன்னை நாராயணசாமியின் சகோதரர் நடன சிகாமணியின் பேத்தியான இவர் எம்ஏ முதுகலை படித்ததோடு கட்டிட வடிவமைப்பு குறித்தான பட்டமும் பெற்றுள்ளார். திமுகவில் முன்னாள் மாவட்ட துணை செயலாளரான இவர் தற்போது சுற்றுச்சுழல் அணியின் மாவட்ட அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். மேலும், லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் வேர்ல்ட் ஹிமானிட்டேரியன் ட்ரைவ் என்ற சர்வதேச அமைப்பின் மாநில தலைவராக உள்ளார். இவரது கணவர் சூர்யபிரகாஷ் மன்னை கட்டிட பொறியாளர் சங்க தலைவராக உள்ளார்.

இந்நிலையில், திமுக வேட்பாளர் மீனாட்சி சூர்யபிரகாஷ் தனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு 21வது வார்டுக்குட்பட்ட வானக்கார தெருவில் நேற்று வீடு வீடாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, சியாமளாதேவி தெருவுக்கு புதிய தார் சாலை அமைத்து தரப்படும். கீழராஜ வீதிக்கும், வானக்கார தெருவுக்கும் இடையில் இருக்கும் கழிவுநீர் வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். குறுக்கு பத்ம சாலவர் தெருவில் குடிநீர் குழாய்கள் சீரமைக்கப்படும். சிங்காரவேலு தெருவுக்கும், கீழராஜ வீதிக்கும் இடையில் உள்ள தெரு மற்றும் மார்க்கெட் சந்தில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டு சுகாதாரமாக பராமரிக்கப்படும்.அரசின் அனைத்து திட்டங்களும் வார்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களுக்கு அடிப்படை வசதியான குடிநீர், தெருவிளக்கு மற்றும் சுற்றுப்புற சுகாதார வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளித்தார்.

Tags : 21st Ward ,Mannargudi Municipality ,
× RELATED லோயர்கேம்ப் பகுதி விவசாய நிலங்களில்...