பொன்னமராவதி பேரூராட்சியில் வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

இலுப்பூர், பிப்.15: அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் ஸ்ருதி நேற்று ஆய்வு செய்தார்.அன்னவாசல் பேரூராட்சியில் 15 வார்டுகளுக்கு 19ம்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேரூராட்சியில் 15வார்டுகளில் உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்கள் பயன்படுத்தக் கூடிய தளவாட பொருட்களை வார்டு வாரியாக பிரித்து பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை வட்டார தேர்தல் பொது பார்வையாளர் ஸ்ருதி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அன்னவாசல் தேர்தல் நடத்தும் அலுவலர் மாதேஸ்வரன் உடனிருந்தார்.

Related Stories: