×

மலைக்கோட்டையை மறைத்த சாரல் மழை திருவெறும்பூர் அருகே கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் தெரு நாய்களை பிடிக்க விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு: போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்ததால் பரபரப்பு

திருவெறும்பூர், பிப். 12: திருவெறும்பூர் அருகே பொதுமக்களுக்குத் தொந்தரவு கொடுத்து வந்த தெருநாய்களை ஊராட்சி நிர்வாகம் பிடித்ததற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கணேசபுரம், குமரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாகவும் சிலரை கடித்து குதறி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யாவிடம் கோரிக்கை விடுத்ததையடுத்து கணேசபுரம், குமரேசபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வந்த 35 தெருநாய்களை பிடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அதே பகுதியைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் ஜானகி சென்னையில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து திருச்சியை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் சிலர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் குமரேசபுரம் ஊராட்சி நிர்வாகம் பிடித்த நாய்களை அதே பகுதியில் மீண்டும் விடவேண்டும் என கூறி புகார் கொடுத்ததாகவும் அதன் அடிப்படையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் ஊராட்சி தலைவர் ரம்யாவை காவல்நிலையத்திற்கு அழைத்து பேச கூப்பிட்ட போது ரம்யா பிடிபட்ட நாய்கள் ஏற்றிய மினி லாரியோடு காவல் நிலையத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விலங்குகள் நல ஆர்வலர்களிடம் தெருநாய்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்து விட்டு பின்னர் ஓயாமரி பகுதியில் கொண்டுபோய் திறந்தவெளியில் விடுவதாக ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்ததற்கு அவர்கள் மறுத்ததோடு நாய்களை பிடித்த அதே இடத்தில் கொண்டு வந்து விட வேண்டும் என கூறியுள்ளனர். அதன்பேரில் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி தாண்டி திறந்த வெளி பகுதியில் விடுவதாக ரம்யா கூறியுள்ளார்.

Tags : Krishnasamudram Prourachum ,Tiruvampur ,Saral ,
× RELATED சோழவந்தான் அருகே பெண்களுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கல்