×

தங்கமயிலின் 51வது கிளை புதுக்கோட்டையில் துவக்கம்: கோமாரி நோய் தடுப்பூசி சிறப்பு முகாம்; கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் 599 கால்நடைகளுக்கு சிகிச்சை

திருச்சி, பிப். 12: திருச்சி கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் திருவெறும்பூர் ஒன்றியம் அரசங்குடி கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் கிராம ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமை ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா தொடங்கி வைத்தார். இதில் கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல் ஆகிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 599 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதுடன், 250 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது.

55 பயனாளிகளுக்கு 55 கிலோ தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை கால்நடை உதவி மருத்துவர் எலிசபெத் மஞ்சு செய்திருந்தார். கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். முகாமில் கன்று பேரணி நடத்தி சிறந்த 3 கிடாரிக்கன்றுகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் மற்றும் கால்நடை வளர்ப்பில் சிறந்த பராமரிப்பு மேலாண்மைக்கான விருதும் வழங்கப்பட்டது.

Tags : Thangamayil ,Pudukottai ,Krishnasamudram ,
× RELATED குடியிருப்பு பகுதிகளில் கடைசி...