×

நெல்லை தெற்கு பைபாசில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம்: பிஷப் பர்னபாஸ் திறந்து வைத்தார்

கே.டி.சி  நகர், பிப். 12: நெல்லை வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் ரோட்டில் ஹீரோ  எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஷோரூம் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று  நடந்தது. நெல்லை திருமண்டல பேராயர் ஏஆர்ஜிஎஸ்டி பர்னபாஸ்  ஜெபித்து ஷோரூமை திறந்து வைத்தார். ஒர்க்ஷாப்பை ஹீரோ எலக்ட்ரிக் மேலாளர் ஏ.எஸ்.அபிலாஷ் திறந்து வைத்தார். ஷோரூம் உரிமையாளர் சாம்சன் பால்ராஜ்  வரவேற்றார். முதல் வாகனத்தை பீஸ் சாப்ட் டெக்னாலஜி அதிபர் ஜான்சனுக்கு  பேராயர் பர்னபாஸ் வழங்கினார். 2வது வாகனத்தை ஹீரோ எலக்ட்ரிக் மேலாளர்  அபிலாஷ் தொழிலதிபர் டிஎஸ்எம்ஓஹெச் உதுமானுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் நெல்லை திருமண்டல மத்திய சபை மன்ற தலைவர் ஜெபராஜ், சின்னம்மாள்புரம் சேகர தலைவர் பீட்டர் தேவதாஸ், என்ஜிஓபி காலனி  சேகர தலைவர் லிவிங்ஸ்டன் ராஜன்துரை, பேராயரின் உதவியாளர் ராஜேஷ், நெல்லை திருமண்டல முன்னாள் லே செயலாளர் வேதநாயகம், முன்னாள் மேயர் விஜிலா சத்யானந்த் மற்றும் மணக்காடு ஜீவகுமார், ஐன்ஸ்டீன், அன்புராஜ் ஜோசப்  மற்றும் தென்தமிழகத்தை சேர்ந்த ஹீரோ எலக்ட்ரிக் குழுமத்தின் அனைத்து  டீலர்கள் கலந்து கொண்டனர். நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்தர் பியூலா சாம்சன்  நன்றி கூறினார். ஏற்பாடுகளை நிறுவனத்தின் மேலாளர் ராயல் ஏனான்  மற்றும் ராஜா மோசஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : Hero Electric Scooter Showroom ,Nellie South Bypass ,Bishop Barnabas ,
× RELATED ஜம்மு காஷ்மீரில் தங்கம் வென்ற குத்து சண்டை வீரருக்கு கலெக்டர் பாராட்டு