186வது வார்டில் அமைந்துள்ள சித்தேரி தூர்வாரி சீரமைக்கப்படும்: திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் உறுதி

ஆலந்தூர், பிப்.12: சென்னை மாநகராட்சி பெருங்குடி மண்டலம் 186வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன், புழுதிவாக்கம் ஷீலா நகர் 1 முதல் 5 தெருக்கள், அகத்தியர் தெரு, திருவள்ளுவர் தெரு, ராமகிருஷ்ணராஜ் நகர் மெயின் ரோடு, ராமலிங்கம் நகர் மெயின் ரோடு போன்ற பகுதிகளில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம், ‘‘நான் வெற்றி பெற்றதும் இந்த பகுதிக்கு பேருந்து வசதி, தரமான சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் சுகாதார பணிகளை நிறைவேற்றி தருவேன். சித்தேரியை தூர்வாரி அழகுபடுத்த நடவடிக்கை எடுப்பேன்,’’ என ஜெ.கே.மணிகண்டன் வாக்குறுதி அளித்தார்.

வாக்கு சேகரிப்பின்போது, 186வது வட்ட திமுக பொறுப்பாளர் குமாரசாமி, வழக்கறிஞர் கமலநாதன், முன்னாள் கவுன்சிலர் புனிதன் ஜனார்த்தனன், ராமமூர்த்தி, லட்சுமணன், சுப.சரவணன், கோட்டீஸ்வரன், மகேஸ்வரன், குபேரா, யோகராஜன், ஆர்.மணிகண்டன், ரகுபதி, கோர்ட் மணி, பி.எம்.தினேஷ், மதுசூதனன், ரமேஷ், முரளி, பாண்டு, அஜித், மகளிரணி சங்கீதா, வசுமதி, சுப, கலா, வனிதா, காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர் லோகநாதன், வட்ட தலைவர் பி.குமார், மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.

Related Stories: