கால்நடை மருத்துவ முகாம்

காரியாபட்டி அருகே வீ.நாங்கூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஊராட்சி மன்றத் தலைவர் மலையடியான் தலைமை வகித்தார்.

 கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ரவிச்சந்திரன், உதவி இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முடுக்கன்குளம் கால்நடை மருத்துவர்(பொ) திருமுருகன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் 1064 கால்நடைகளுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

சிறந்த கலப்பின கிடேரிகளின் உரிமையாளர்கள் மூன்று பேருக்கும், கால்நடைகளை சிறப்பாக மேலாண்மை செய்த மூன்று பேருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் கால்நடை ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், உதவியாளர் செல்வராஜ் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Related Stories: