×

குன்றத்தில் தெப்பத்திருவிழா ரத்து

திருப்பரங்குன்றம், பிப்.11: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு தோறும் தெப்ப திருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தெப்பத்திருவிழா கடந்த பிப்.1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனையொட்டி தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் காலை மாலை நேரங்களில் திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளினர்.

தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் அனைத்து விழாக்களும் கோயிலுனுள் உள் திருவிழாவாக நடைபெற்றது. இந்நிலையில் முக்கிய விழாவான தெப்பத்திருவிழா ரத்து செய்யப்பட்டது. மேலும் சூரசம்ஹாரம் விழா உள் திருவிழாவாக நேற்று மாலை கோயிலுக்குள் உள் திருவிழாவாக நடைபெற்றது.

Tags : Kunrat ,
× RELATED குன்றத்தில் தெப்பத்திருவிழா ரத்து