அலங்காநல்லூர் அருகே கோவில் உற்சவ விழாவில் எருதுகட்டு

அலங்காநல்லூர், பிப்.11: அலங்காநல்லூர் அருகே கோவில்பாப்பாகுடி கிராமத்தில் சோணை கருப்பணசுவாமி திருக்கோவில் உற்சவ விழா நடைபெற்றது. கடந்த 3 நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் முதல் நாளில் அம்மச்சி அம்மன் எழுந்தருளல் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து மாலையில் மாவிளக்கு பூஜையும் நடைபெற்றது. இரண்டாவது நாளில் கோவில்பாப்பாகுடி திருக்கண் மண்டபத்தில் சோனை கருப்பண்ணசுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

மூன்றாம் திருவிழாவாக நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான எருது கட்டு திருவிழா செண்பக மூர்த்தி அய்யனார் கோவில் திடலில், எம்எல்ஏ தளபதி தலைமையில், மாநில வர்த்தக அணி அமைப்பாளர் தனச்செல்வம், ஊராட்சி தலைவர் சரவணன், துணைத் தலைவர் சோனை ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. கிராம கோவில் காளை கிராம 13 மரியாதைகாரர்களின் 13 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

Related Stories: