×

நண்பனின் சகோதரிக்கு குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர்: தட்டிக்கேட்ட பள்ளி மாணவர் மீது தாக்குதல்

கோவை, பிப். 12: கோவையில் நண்பனின் சகோதரிக்கு குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் செய்ததை தட்டிக்கேட்ட பள்ளி மாணவரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். கோவை நியூ சித்தாபுதூர் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த 16 வயது மாணவன் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது நண்பனின் சகோதரிக்கு ரத்தினபுரியை சேர்ந்த ஹரிகரன் (19) என்பவர் செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பி டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனையறிந்த 16 வயது மாணவன், தனது நண்பனுடன் சேர்ந்து ஹரிகரனை கண்டித்துள்ளார். இது தொடர்பாக, அவர்களுக்கு இடையே விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில், சம்பவத்தன்று அந்த மாணவன் பள்ளிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக காந்திபுரத்தில் உள்ள டீக்க

டை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த ஹரிகரன் மற்றும் அவரது நண்பர் சிவராமன் (19) இருவரும் சேர்ந்து மாணவரை அடித்து உதைத்து மிரட்டி விட்டு சென்றனர். இது குறித்து காட்டூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் தாக்குதல், மிரட்டல் வழக்குப்பதிவு செய்து கோவை ரத்தினபுரி புதுப்பாலத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் சிவராமன், ரத்தினபுரி ராமதாஸ் தெருவை சேர்ந்த ஹரிகரன் ஆகிய இருவரை கைது செய்தனர்.

Tags : Torcher ,
× RELATED காதலிக்க வலியுறுத்தி லவ் டார்ச்சர்;...