விருத்தாசலம் புறவழிச்சாலையில் வெற்றி மஹால் திறப்பு விழா

விருத்தாசலம், பிப். 12: விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை பொன்னேரி புறவழிச்சாலையில் வெற்றி மஹால் திறப்பு விழா நடந்தது.விழாவிற்கு பாமக மாவட்ட விவசாய சங்க தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். தொழிலதிபர் செல்வக்குமார் - செண்பகம், வெற்றி ஆர்சிசி பைப்ஸ் உரிமையாளர் கந்தவேல் - ராமதிலகம் தம்பதியினர் வரவேற்றனர். பாமக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பாமக மாநில மகளிர் அணி செயலாளர் டாக்டர் தமிழரசி, சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றினார்கள்.

முன்னாள் எம்எல்ஏ கலைச்செல்வன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் முருகன், முன்னாள் மாவட்ட செயலாளர் சந்தானமூர்த்தி, முன்னாள் மாநில துணைப் பொது செயலாளர் அசோக்குமார், ஜெயின் ஜுவல்லரி உரிமையாளர் ரமேஷ்சந்த், கேஎஸ்ஆர் பள்ளி தாளாளர் சுந்தரவடிவேல், பாமக மாவட்ட வன்னியர் சங்க தலைவர் சிங்காரவேலு, நகர செயலாளர் விஜயகுமார், ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர்கள் குப்புசாமி, பழனிவேல், சிவ கோதண்டம், கவுன்சிலர் செல்வராஜ் மற்றும் திருஞானம் மற்றும் பாமக உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் மக்கள் பிரதிநிதிகள், உறவினர்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். வெற்றி மஹால் உரிமையாளரும், மாவட்ட வன்னியர் சங்க துணை தலைவருமான வெற்றிவேல்-சித்ரா நன்றி கூறினர்.

Related Stories: