காவல்துறை வாகனங்களை ஐஜி ஆய்வு வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில்

வேலூர், பிப்.12:காவல்துறை வாகனங்களின் நிலை குறித்து வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார்.ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை சார்ந்த அனைத்து வாகனங்களும் அவற்றின் பராமரிப்பு, வண்டியின் ஓடும் திறன் உட்பட வண்டியின் அனைத்து நிலைகளும் ஆய்வு செய்யப்படும். இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆய்வுக்கு வந்த வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார் நேற்று முன்தினம் இரவு வேலூரில் தங்கினார்.

தொடர்ந்து நேற்று காலை வேலூர் நேதாஜி ஸ்டேடியம் வந்தார். அங்கு காவல்துறையின் இருசக்கர வாகனங்கள், கார்கள், ஜீப்புகள், வேன்கள், பேருந்துகள் என 100 வாகனங்களின் நிலையை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து ஆயுதப்படை மைதானமான நேதாஜி ஸ்டேடியம், கோட்டை வளாகத்தில் உள்ள ஆயுதப்படை வளாகம், மைதானம் என அனைத்தையும் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் எஸ்பி ராஜேஷ் கண்ணன், டிஎஸ்பி மணிமாறன் உட்பட காவல்துறை அதிகாரிகள் இருந்தனர்.படவிளக்கம்..

வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் காவல்துறை வாகனங்களின் நிலை குறித்து ஐஜி சந்தோஷ்குமார் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் எஸ்பி ராஜேஷ்கண்ணன்.

Related Stories: