×

இன்று துவக்கம் வேதாரண்யம், சீர்காழியில் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து கடும் சேதம்

வேதாரண்யம், பிப்.12: நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை, ஆயக்காரன்புலம், தலைஞாயிறு, வாய்மேடு, கரியாப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முதல் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.வேதாரண்யத்தில் நேற்று காலை 8 மணி வரை 7 செ.மீ மழையும், கோடியக்கரையில் 8 செ.மீ மழையும் தலைஞாயிறு 2 செமீ மழையும் பதிவாகி உள்ளது. தொடர்ந்து பெய்யும் திடீர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 2,000 ஏக்கர் வயல்களில் தண்ணீர் தேங்கியும், மழையால் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் சாய்ந்தும் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. மழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்து வயலில் கிடந்த வைக்கோல் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.

விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள நெல் தார்பாய் மூலம் மூடி பாதுகாப்பாக வைத்துள்ளனர். மழையால் நெல் கொள்முதல் பாதிக்கபட்டுள்ளது. இந்த திடீர் மழையால் சம்பா சாகுபடி செய்த விவசாயிகள் கடுமையாக நஷ்டம் அடைந்துள்ளனர். தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.சீர்காழி:  மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், எடமணல், உமையாள்பதி, திருவெண்காடு, வைதீஸ்வரன் கோயில், மங்கைமடம், நாங்கூர், எடக்குடி, வடபாதி, திருவாலி சுற்று வட்டார பகுதிகளில் இந்த ஆண்டு 55 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவு விவசாயிகள்  தொடங்கியிருந்தன. கடந்த சில நாட்களாக விவசாயிகள் அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அறுவடை பணிகள் முழுமையாக நிறைவடையும் நிலையில் இருந்தன.
இந்நிலையில் நேற்று காலை தொடங்கிய மழை, மாலை வரை நீடித்ததால் பெரும்பாலான இடங்களில் வயல்களில் மழை நீர் புகுந்ததால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.


Tags : Vedaranyam ,Sirkazhi ,
× RELATED வேதாரண்யம் அருகே குடிதண்ணீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் மறியல்