×

குளித்தலை நகராட்சி வாக்கு எண்ணும் மையம் கலெக்டர் ஆய்வு

குளித்தலை, பிப்.12: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ம்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம் குளித்தலை நகராட்சியில் 24 வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில் நகராட்சி தேர்தல் நடைபெற்று அதற்கான வாக்கு எண்ணும் மையத்திற் குளித்தலைஅரசுஆண்கள்மேல்நிலைப் பள்ளியை தேர்வு செய்து அதற்கான முன்னேற்பாடுகள் பணிகள் நடைபெற்று வருகிறது இந்த வாக்குஎண்ணும் மையத்தை கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் எஸ் பி வடிவேலு முன்னிலையில் மேற்கொண்டனர்.

அப்போது வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்களுடன் எத்தனை முகவர்கள் வரவேண்டும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்தும் போதிய சுகாதார வசதி குடிநீர்போதிய சுகாதார வசதி குடிநீர் வசதி குறித்துஆய்வு பணி மேற்கொண்டனர். அப்போது உடன்் நகராட்சி தேர்தல் அலுவலரும் நகராட்சிி ஆணையர்மான சுப்புராம், பொறியாளர் ராதா, பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில் மற்றும் நகராட்சி பணியாளர்கள் காவல்துறை அதிகாரிகள் இருந்தனர்.

Tags : Bath Municipal Ballot Counting Center ,
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு