×

மோகனூர் அருகே கும்பாபிஷேக விழா நடத்த முத்தரப்பு பேச்சுவார்த்தை

மோகனூர், பிப்.11:  மோகனூர் அருகே கொமாரபாளையம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, வேட்டுவம்பாளையம், களிமேடு ஆகிய ஊர்களுக்கு பாத்தியப்பட்ட விநாயகர், மாரியம்மன், காளியம்மன் கோயில் உள்ளது. இதில் மாரியம்மன் கோயிலில் கடந்த 1937ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கோயில் சிதிலமடைந்து இருப்பதால், ஊர் பொதுமக்கள் கூடி கோயில் புதியதாக  கட்டப்பட்டு வரும் 14ம் தேதி  கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது அறிவிப்பு செய்து, முக்கிய பிரமுகர்களுக்கு கங்கணம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் தங்களுக்கும் கங்கணம் கட்ட வேண்டுமென கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக மோகனூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் தங்கராஜ் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் அனைவருக்கும் கங்கணம் கட்டி கும்பாபிஷேகம் நடத்தலாம் என இருதரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.


Tags : Tripartite ,Kumbabhishekam ,Mohanur ,
× RELATED மோகனூர் -வாங்கல் சாலை சோதனைச்சாவடியில் எஸ்பி ஆய்வு