×

கொல்லிமலை சோளக்காடு பகுதியில் நவீன சுகாதார வளாகம்

சேந்தமங்கலம், பிப். 11: தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான கொல்லிமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, ஆந்திராவில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் முதல் நுழைவாயிலான சோளக்காடு பகுதியில், ஏராளமான மளிகை கடைகள், ஓட்டல்கள், பழச்சந்தை உள்ளன. அடிவாரத்தில் இருந்து மேலே வரும் சுற்றுலாப் பயணிகள், சோளக்காட்டில் சிறிது நேரம் தங்களது வாகனங்களை நிறுத்தி இளைப்பாறி விட்டு பழங்களை வாங்கிக்கொண்டு செல்வார்கள். இங்கு சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டிற்கு போதிய கழிப்பிடம் இல்லை. ஒரே ஒரு கழிப்பிடம் மட்டுமே உள்ளது. அதுவும் பயன்படுத்த முடியாத அளவுக்கு, சுகாதாரமற்று காணப்படுகிறது. இதனால், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, சோளக்காடு பகுதியில் நவீன சுகாதார வளாகம் அமைத்து வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Kollimalai Cholakadu ,
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்