×
Saravana Stores

மல்லாங்கிணறு பேருராட்சியில் 15 வார்டுகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு

காரியாபட்டி,பிப். 11: காரியாபட்டி அருகே மல்லாங்கிணறு பேரூராட்சி தேர்தலையொட்டி திமுக கட்சி தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகர செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் போஸ்தேவர், மந்திரிஓடை கண்ணன், நரிக்குடி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக கட்சி தேர்தல் அலுவலகத்தை தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:
தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் செயல்படுத்த கூடிய பல நல்ல திட்டங்களை, முதல்வரிடம் பேசி என்னால் பெற்று தரமுடியும். எனவே மல்லாங்கிணறு பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளையும் திமுக அமோக வெற்றி பெற அனைவரும் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டும் என்றார்.மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் கமலிபாரதி, பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், வைஸ் சேர்மன் ராஜேந்திரன், தொண்டரணி மாவட்ட துணை அமைப்பாளர் செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Mallanginaru ,Minister ,Thangam Tennarasu ,
× RELATED ரூ.75.85 கோடி மதிப்பீட்டில் விருதுநகர்...