×

ஹிஜாப் போராட்டம் கவலையளிக்கிறது இமாம் கவுன்சில் அமைப்பினர் பேட்டி

மதுரை, பிப்.11: மதுரையில் அமைப்பின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. முடிவில் அமைப்பு நிர்வாகியும், அரபிக்கல்லூரி முதல்வருமான முஸ்தபா கமால்தீன் கூறியதாவது: தேர்தலை முன்வைத்து மக்கள் மத்தியில் இன வேறுபாட்டை உருவாக்கும் வகையில் உத்ரகண்ட் மாநிலம் ஹரித்துவார் கூட்டத்தில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்வதாக அறிவிக்கப்பட்டதற்கு ஆல்-இந்திய இமாம் கவுன்சில் கண்டனம் தெரிவிக்கிறது. கர்நாடகாவில் நடைபெறும் ஹிஜாபிற்கு எதிரான போராட்டத்தையும் கவலையோடு கவனிக்கிறோம். பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது. பெண் கல்வியை தடுக்கும் நோக்கில் ஹிஜாப் போராட்டம் முன்னிறுத்தப்படுகிறது. இஸ்லாமியர்களை ஒடுக்கப்படுத்தப்பட்டவர்களாக அடையாளப்படுத்தும் முயற்சியை கண்டிக்கிறோம். நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்பதுடன், சட்ட ரீதியான முயற்சிகளை முன்னெடுப்போம் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.முன்னதாக கூட்டத்தில் ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் சாகுல் ஹமீது, அப்துல் ஜப்பார், அரபிக் கல்லூரி நிர்வாகி ஸபூர் முஹைதீன், பாப்புலர் பிரண்ட் நிர்வாகிகள் முஹம்மது யூசுப், சையது இஸ்ஹாக் பேசினர். உலமாக்கள் கலந்துரையாடல் நிகழ்வு நடந்தது.

Tags : Imam Council ,
× RELATED ஹிஜாப் போராட்டம் கவலையளிக்கிறது இமாம் கவுன்சில் அமைப்பினர் பேட்டி