×

ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தெப்போற்சவம்

உத்திரமேரூர்: உத்திரமேரூரில் ஆனந்தவல்லி நாயக சமேத ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு, தெப்போற்சவ விழா நேற்று முன்தினம் வெகு விமரிசையாக நடந்தது. இதையெட்டி தேவி, பூதேவியுடன், சுந்தரவரதராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 தொடர்ந்து, கோயில் வளாகத்தில் அமைந்துள்ள குளத்தில் வண்ண மலர்கள் மற்றும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட  தெப்பத்தில் தேவி, பூதேவியுடன் உற்சவர் சுந்தரவரதராஜப் பெருமாள் எழுந்தருளி குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.இதில், உத்திரமேரூர் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



Tags : Sreesundaravaratharaja Perumal Temple ,
× RELATED ஸ்ரீசுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில் தெப்போற்சவம்