×

வேதாரண்யேஸ்வரர் கோயிலில் மாசிமக விழா இந்திர வாகனத்தில் சுவாமி வீதிஉலா

வேதாரண்யம், பிப்.11: வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான காட்சி கொடுத்த தலம். இந்த திருக்கோயில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 29.01.2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. 8ம் தேதி இரவு பஞ்சமூர்த்தி சகிதம் சந்திரசேகர சுவாமி இந்திர விமானத்தில் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். மேலும் வரும் 13ம் தேதி ஞாயிற்று கிழமை தேர் திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கு தேர் அலங்கரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், உபயதாரா்கள், காவல்துறையினர், நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறையினர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

Tags : Masjid Festival ,Vedaranyaswarar Temple ,Swami Veedhiula ,
× RELATED திருச்செந்தூர் மாசித் திருவிழாவிற்கு...