நாகை நகராட்சி 26வது வார்டில் திமுக ஆதரவு காங்கிரஸ் வேட்பாளர் முகம்மதுநத்தர் தீவிர வாக்கு சேகரிப்பு

நாகை, பிப்.11: நாகை நகராட்சி 26வது வார்டில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முகம்மதுநத்தர் நேற்று தனது வார்டு பகுதியில் வாக்குகள் சேகரித்தார். அப்போது திமுக மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் அமிர்தராஜா, திமுக நகர செயலாளர் பன்னீர், வர்த்தக அணி அமைப்பாளர் மாரிமுத்து உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் இருந்தனர். வாக்குகள் கேட்கும் போது முகம்மதுநத்தர் கூறியதாவது: நான் 26வது வார்டு நகராட்சி உறுப்பினராக தேர்வு செய்யபட்டால் ஜாதி, மத பேதமின்றி அனைத்து மக்களுக்காக செயல்படுவேன். சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் 26வது வார்டிற்கு உட்பட்ட அனைத்து தெருக்களிலும் எனது சொந்த செலவில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். வார்டு பொது மக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்கும் வண்ணம் 26 வது வார்டிற்கு என பிரத்யேகமாக செல்போனில் மொபைல் ஆப் உருவாக்கப்படும். வார்டிற்கு உட்பட்ட நியாய விலைக்கடைகளில் பொருட்கள் தரமாக கிடைக்க செய்வதுடன், பொருட்கள் கொடுக்கப்படும் தேதி, அரசின் நலத்திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் மொபைல் ஆப் வாயிலாக தெரிவிக்கப்படும். குப்பைகளை அகற்ற வழிவகை செய்யப்படும். குடிநீர் பிரச்னையை தீர்க்கும் விதமாக நகராட்சி குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

Related Stories: