நெடுஞ்சாலை பணி: சபா ராஜேந்திரன் எம்எல்ஏ ஆய்வு

பண்ருட்டி, பிப். 11: பண்ருட்டி அருகே காடாம்புலியூர், கொள்ளுகாரன்குட்டை கீழகொல்லை, இந்திராநகர் ஆர்ச்கேட் ஆகிய பகுதிகளில் விக்கிரவாண்டி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணி பல மாதங்களாக செய்யாமல் இருந்தது. இதனால் அவ்வழியே செல்லும் ஏராளமான வாகனங்கள் சேதமடைந்து விபத்துகள் ஏற்பட்டன. இந்நிலையில் நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை நேரில் அழைத்து சென்று பழுதடைந்த சாலைகளை காண்பித்தார். அப்போது உடனடியாக சாலைப்பணியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன்பேரில் பண்ருட்டி அருகே கொள்ளுகாரன்குட்டை என்ற இடத்தில் நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் சாலை பணிகளை மேற்கொண்டனர். இதனை நெய்வேலி எம்எல்ஏ சபா ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு சாலை பணிகள் தரமாகவும், நேர்த்தியாகவும் அமைத்து விரைந்து முடிக்க கேட்டுக்கொண்டார். அப்போது அவைத்தலைவர் ராசா, தொமுச பேரவை துணை செயலாளர் வீரராமச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி ஆடலரசன், ஒன்றிய துணை செயலாளர் செல்வகுமார், பொருளாளர் ஐயப்பன், கூட்டுறவு சங்க தலைவர் தனபதி, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் குணசேகரன், நெய்வேலி இளைஞரணி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: