பி.டி.ஓவை கண்டித்து ஊராட்சி செயலாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேப்பூர், பிப். 11:  கடலூர் மாவட்டம், நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 64 ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தில், அரசு பணியாளர்களுக்கு ஜனவரி 2022 முதல் அகவிலைப்படி 31 சதவீதம் உயத்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்நிலையில், நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜனவரி மாதம் ஊதியம் வழங்கும் போது, முதல்வர் அறித்த அகவிலைப்படி 31 சதவீதம் உயத்தி வழங்க வேண்டுமென நல்லூர் பி.டி.ஓ. சங்கரிடம் ஊராட்சி செயலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.அவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்த பி.டி.ஓ. சங்கர் கூட்டத்திலிருந்து வெளியேறினார். இதனால் அதிருப்தியடைந்த ஊராட்சி செயலர்கள் 63 பேர் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் பி.டி.ஓ. சங்கரை கண்டித்து ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: