×

அலங்காநல்லூர் அருகே புற்றுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

அலங்காநல்லூர், பிப்.10: அலங்காநல்லூர் அருகே கீழச்சின்னம்பட்டி கிராமத்தில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, வேலம்மாள் இணை சுகாதார அறிவியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு துணை இயக்குனர் சுகாதார சேவைகள் இணைந்து புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பிரமிளா விசாகன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் ரமேசன் செல்வராஜன், துணை தலைவர் தர்மராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து புகைப்பிடித்தல், மது அருந்துதல் இவற்றை தவிர்த்து புற்றுநோய் இல்லா புதியதோர் உலகம் படைப்போம் என பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

இதேபோன்று அலங்காநல்லூர் அருகே மேலச்சின்னம்பட்டி கிராமத்தில் உலக தொழு நோய் வாரத்தை முன்னிட்டு பொதுமக்கள் முன்னிலையில் மாணவர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. ஜனவரி 30 முதல் பிப்ரவரி 14 வரை உலக தொழுநோய் வாரமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் வேலம்மாள் கல்வி அறக்கட்டளை நிறுவனர் முத்துராமலிங்கம், ஊராட்சி தலைவர் முருகையா சிவனேசன், சுகாதார கல்வியாளர் அம்சத் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலையில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏர்க்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாணவ,மாணவிகளை பாராட்டி சிறப்பாக பங்கு பெற்ற மாணவர்களுக்கு மருத்துவர் சாமியப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலம்மாள் அறிவியல் கல்லூரி ஆசிரியர்கள் மாணவிகள் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Alankanallur ,
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை