×

ஓய்வூதியர் சங்க கூட்டம்

முஷ்ணம், பிப். 10: முஷ்ணத்தில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் முஷ்ணம் வட்ட கிளை கூட்டம் நடைபெற்றது. வட்டத் தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் நமச்சிவாயம், பொருளாளர் குமாரசாமி, ஐய்யாக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் காதர்மீரான் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு துறை சார்ந்த ஓய்வூதியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்கிய தமிழக முதல்வருக்கு வட்ட கிளை சார்பில் நன்றி தெரிவித்தும், உள்ளிட்ட  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் சிற்றம்பலம், சாவித்திரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Pensioners' Association ,
× RELATED ஓய்வூதியர்கள் சங்க பேரவை கூட்டம்