×

மாநகராட்சி 18வது வார்டை சுகாதாரமானதாக மாற்றுவேன் திமுக வேட்பாளர் சக்கரை சரவணன் வாக்குறுதி

சேலம், பிப்.10: சேலம் மாநகராட்சி 18வது வார்டை சுகாதாரமான வார்டாக மாற்றிக்காட்டுவேன் என்று திமுக வேட்பாளர் சக்கரை சரவணன் பொதுமக்களிடம் வாக்குறுதி கொடுத்தார். சேலம் மாநகராட்சி 18வது வார்டில் மெய்யனூர் பகுதி திமுக செயலாளரும், சூரமங்கலம் மண்டல குழு முன்னாள் தலைவருமான சக்கரை சரவணன் போட்டியிடுகிறார். அவரது வார்டுக்குபட்ட பகுதியில்  வீடு வீடாக சென்று தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களை சந்தித்து ஓட்டுக்கேட்டு வருகிறார். பொதுமக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

அப்போது அவர் பொதுமக்களிடம் வாக்குறுதிகளை கூறினார். மெய்யனூர் காசக்காரனூரில் சமுதாய கூடம் அமைத்து தருவேன். மாரியம்மன் கோவில் தெரு, தாயாங்கரடு, பனங்காடு, காசக்காரனூர் ஸ்வர்ணபுரி ஆகிய இடங்களில் அங்கன்வாடி மையம் அமைத்துத்தருவேன். காசக்காரனூரில் அரசு இடத்தில் ரேசன்கடை கட்டித்தரப்படும். அரசின் மூலம் கிடைக்கும் திருமண உதவித்தொகை,முதியோர் உதவித்தொகை,விதவைகளுக்கான உதவித்தொகை கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுப்பேன்.

வார்டு பகுதி முழுவதும் தினந்தோறும் குப்பைகளை அகற்றியும், சாக்கடைகளை அகற்றி, சுகாதாரமாக இருக்க அயராது உழைப்பேன்.குடிநீர் பிரச்னை முற்றிலும் அகற்றி 24 மணிநேரமும் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.வாரத்திற்கு ஒரு முறை அனைத்து தெருக்களுக்கும் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுப்பேன்.சேலம் மாநகரில் 18வது வார்டு மிகச்சிறந்த வார்டாக மாற்றிக்காட்டுவேன் என அவர் கூறினார்.
அவருடன் வட்டச்செயலாளர் ஜெயவேல், பிரதிநிதி பாண்டியன், துணை செயலாளர் மாதேஸ்வரன், பொருளாளர் தனபால், பிரதிநிதிகள் ஆசைத்தம்பி, கதிரேசன், முனுசாமி, முரளிராஜ், தமிழழகன், கார்த்திகேயன், காங்கிரஸ் நிர்வாகிகள் ராஜா, ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags : DMK ,Chakkarai Saravanan ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி