பரமத்திவேலூர் தாலுகாவில் தேர்தல் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் ஆய்வு

பரமத்திவேலூர், பிப்.10: பரமத்திவேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பரமத்தி, பரமத்திவேலூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்ரேயா சிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு சின்னங்கள் அச்சடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பரமத்திவேலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பரமத்தி, வேலூர் ஆகிய பேரூராட்சிகளில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்ரேயா சிங் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல், அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடுபவர்கள் விவரம், தேர்தலுக்கு தேவையான இதரப் பொருட்கள் தயார் நிலையில் உள்ளது குறித்தும்  கேட்டறிந்தார். ஆய்வின்போது பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related Stories: