×

புழுதிவாக்கம் 186வது வார்டு திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ஆலந்தூர்: பெருங்குடி மண்டலம் 186வது வார்டு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன் நேற்று புழுதிவாக்கம் பாதாள விநாயகர் கோயில் தெரு, பகத்சிங் தெரு, முத்து முகம்மது தெரு, ஜோதி ராமலிங்கம் தெரு, அண்ணாமலை தெரு போன்ற பகுதிகளில் வாக்கு சேகரித்தார். இந்த வாக்கு சேகரிப்பின்போது திமுக வேட்பாளர் ஜெ.கே.மணிகண்டன், `என்னை வெற்றி பெற செய்தால் இந்த பகுதியில் தரமான சாலைகள் அமைத்து தருவேன். புதிய தொழில்நுட்ப மின்சார டிரான்ஸ்பார்மர் அமைத்து தர நடவடிக்கை எடுப்பேன். அரசு திட்டங்கள் அனைத்தையும் இந்தப் பகுதிக்கு கொண்டு வருவேன்.

பாதுகாக்கபட்ட குடிநீர், மழைநீர் கால்வாய் வசதி நூலகம். உருவாக்கி தருவேன்’ என உறுதி கூறினார். இந்த வாக்கு சேகரிப்பின்போது வட்ட திமுக பொறுப்பாளர் குமாரசாமி, வழக்கறிஞர் கமலநாதன், முன்னாள் கவுன்சிலர் புனிதன், ஜனார்த்தனன், ராமமூர்த்தி, லட்சுமணன், சு.ப.சரவணன் கோட்டீஸ்வரன் மகேஸ்வரன், குபேரா, யோகராஜன், மணிகண்டன் ரகுபதி, பி.எம்.தினேஷ், மதுசூதனன், ரமேஷ் முரளி பாண்டு, மகளிரணி சங்கீதா, காங்கிரஸ் சார்பாக வட்டார தலைவர் லோகநாதன் வட்ட தலைவர் குமார், பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags : 186th Ward ,DMK ,
× RELATED திருவொற்றியூர் மேற்கு பகுதி திமுக சார்பில் 1000 பேருக்கு நல உதவிகள்