×

திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சங்கரன்கோவிலில் ராஜா எம்எல்ஏ பிரசாரம்

சங்கரன்கோவில், பிப்.10:  சங்கரன்கோவில் நகராட்சியில் 30 வார்டுகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் சூடு பிடித்துள்ளது. நேற்று சங்கரன்கோவில் 18, 20,21 வார்டுகளில் ராஜா எம்எல்ஏ திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஒவ்வொரு பகுதியாக சென்று அனைத்து வீடுகளுக்கும் சென்று திமுக கூட்டணிக்கு வாக்குகள் சேகரித்தார். பிரசாரத்தில் திமுக தென்காசி தெற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, மாவட்ட இளைஞரணி சரவணன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் பீர்மைதீன், மதிமுக நகர செயலாளர் ஆறுமுகச்சாமி, மாவட்டஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்  மாரியப்பன், மதிமுக மாவட்ட இளைஞரணி துணைஅமைப்பாளர் ஹக்கீம், மதிமுக நகர துணைச் செயலாளர் ராஜகோபால்,  காங்கிரஸ் நகர துணை செயலாளர் பீர் மைதீன், தகவல் தொழில்நுட்பப் பிரிவு நஸ்ருதின், திமுக வார்டு செயலாளர்கள் ஜிந்தா மைதீன், அப்துல்காதர், காளிராஜ், சதாசிவம் மற்றும் திமுக மாணவரணி அப்பாஸ்அலி, கார்த்திக், தமமுக தீன் மைதீன், ஜெயகுமார், சபரிநாத், ஜலால், ரகுமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Raja ,MLA ,Sankarankoil ,DMK ,
× RELATED திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து...