×

பேராவூரணி பேரூராட்சி பகுதியில் பறக்கும்படை தீவிர வாகன சோதனை

பேராவூரணி, பிப்.10: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் சட்ட விரோத பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குதல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வகையில், பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனிவேல் மேற்பார்வையில், பேராவூரணி பேரூராட்சி பகுதியில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.பறக்கும் படை அலுவலர் சசிகுமார் தலைமையிலான கண்காணிப்பு படையில், யோகராஜ், கண்ணன் ஆகிய காவல்துறையினரும், திருப்பதி தலைமையிலான பறக்கும் படையில் சுதாராணி, சண்முகப்பிரியா ஆகிய காவல்துறையினரும், சுப்ரமணியன் தலைமையிலான கண்காணிப்பு படையில் ராஜேஷ், பிரசாந்த் ஆகிய காவல்துறையினரும் இடம்பெற்றுள்ளனர்.இவர்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை ஒரு குழுவும், 2 மணி இரவு 10 மணி வரை ஒரு குழுவும், 10 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஒரு குழுவும் என மூன்று குழுக்களாக 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.நகருக்குள் வரும் வாகனங்கள், வெளியேறும் வாகனங்கள், சந்தேகப்படும்படியான வாகனங்கள் ஆகியவற்றை நிறுத்தி சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags : Peravurani Municipality ,
× RELATED பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் 100...