கறம்பக்குடி அருகே மணல் அள்ளியவர் மீது வழக்கு

கறம்பக்குடி, பிப்.10: கறம்பக்குடி அருகே மணல் அள்ளியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே நெய்வேலி அருகே வடபாதியை சேர்ந்தவர் செல்லத்துரை (47). இவர் அனுமதியின்றி லோடு ஆட்டோவில் மணல் அள்ளிக்கொண்டு வருவதாக கறம்பக்குடி போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து சப்இன்ஸ்பெக்டர் பழனிக்குமார் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செல்லத்துரை நரங்கியபட்டு பிரிவு சாலை அருகே ஆட்டோவில் மணலுடன் வரும்போது அவரை வழி மறித்து மணலை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories: