கறம்பக்குடி பகுதியில் பறக்கும் படை தீவிர சோதனை

கறம்பக்குடி, பிப்.10:கறம்பக்குடி பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.கறம்பக்குடி பேரூராட்சியில் நகர் புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்க வகையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதையயடுத்து அனைத்து பகுதிகளிலும் இருந்து கறம்பக்குடி வழியாக வந்து செல்லும் கார், வேன்கள், லோடு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை தணிக்கை செய்து தீவிர சோதனை செய்து வருகின்றனர். கறம்பக்குடியில் பறக்கும் படை அதிகாரி, ஊரக வளர்ச்சி பறக்கும் படை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் வாகன தணிக்கை சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: