×

தேவகோட்டை நகராட்சியில் தேர்தல் விதிகள் விளக்க கூட்டம்

தேவகோட்டை, பிப்.9: தேவகோட்டை நகராட்சியில் 27 வார்டுகளில் மொத்தம் 112 பேர் போட்டியிடுகின்றனர். போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து விளக்க கூட்டம் நேற்று நடைபெற்றது. விதிமுறைகள் குறித்து போலீசார்  எடுத்துரைத்தனர். பொதுமக்களுக்கு வேட்பாளர்கள் பரிசுப் பொருள்கள் பணமாகவோ பொருளாகவோ கொடுக்கக்கூடாது. போட்டியிடும் வேட்பாளர்கள் பரிசுப்பொருட்கள் கொடுக்கிறார் என்று தெரிந்தால் தகுந்த ஆதாரத்துடன் போலீசாரிடம் எடுத்துரைத்தால் அந்த வேட்பாளர் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எடுத்துரைத்தனர். கூட்டத்தில் ஏடிஎஸ்பி வெற்றிச்செல்வன், டிஎஸ்பி ரமேஷ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags : Devakottai ,
× RELATED தேவகோட்டையில் 1500 மதுபாட்டில்கள் பறிமுதல்