×

நாளை கிழக்கு தொகுதியில் மாநகராட்சி திமுக வார்டு வேட்பாளர் அறிமுக கூட்டம்


மதுரை, பிப்.9:  மதுரை வடக்கு மாவட்டம், கிழக்கு சட்டமன்ற தொகுதியில் உள்ள மாநகராட்சி வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் செயல்வீரர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி காண வேண்டுமென்று அறிவித்திருந்தார். அதனை மெய்ப்பிக்கும் வகையிலும், தலைவரின் ஆணையை முழுமையாக நிறைவேற்றும் வகையிலும் நம் எல்லோரும் ஒன்று சேர்ந்து தேர்தல் பணியாற்றுவது குறித்தும், வெற்றி வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவதும் போன்ற சிறப்பு நிகழ்ச்சி நாளை காலை 10 மணியளவில் மதுரை யாதவா பெண்கள் கல்லூரி அருகில் உள்ள குறிஞ்சி திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திருப்பாலை மற்றும் கண்ணனேந்தல் பகுதி வார்டு எண் 5, 6, 7, 8, 9, 11 மற்றும் 13 ஆகிய வார்டுகளில் களம் காணும் வெற்றி வேட்பாளர்கள் அறிமுகம் நடக்கிறது. எனவே இக்கூட்டத்தில் மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பகுதி, வட்டக்கழக, பேரூர் கழக, செயலாளர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், கழகத்தினர், உள்ளாட்சி பிரதிநிதிகள் மேலும் தேர்தல் பணி பொறுப்பாளர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : DMK ,eastern constituency ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி